பொதுவாக சுக்கிர தசை வரப்போகிறது என்றாலே ஒருவித பூரிப்பு, மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.

Advertisment

"ஊரில் பெரியவன் நீ தேரில் போவாய் மகனே சோர்வேயில்லாமல் சுறுசுறுப்படைவாய் கூறுவேன்; உன்னை சுக்கிரன் கோடீஸ்வரனாக்குவான்...'

-இப்படி ஜோதிடர் புகழ்ந்தால் எப்படியிருக்கும்? தரையில் நிற்குமா கால்கள்? பறப்பது போன்ற உணர்வு. சுக்கிர தசையை எதிர்பார்த்துக் கற்பனையிலும் கனவிலும் காலங்கள் ஓடும். "கூரையைப் பொத்துக்கிட்டு கொட்டப்போவது உறுதி'யென்று வேறு கூறிவிடுவார்கள். ஆனால் சிலருக்கு நடப்பதோ வேறுமாதிரி இருக்கும். என்ன காரணம்?

sukiaran

Advertisment

மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு ஆதிபத்தியரீதியாக சுக்கிரன் யோக- போகத்தை வழங்க அதிகாரம் பெற்றவர். ஆனால் எல்லாருக்கும் அது சாத்தியமாவதில்லை. பலர் சுக்கிர தசையில் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கிறார்கள்.

பொதுவாக, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் முறைப்படி இருந்து, மேற்படி லக்னம் ஒன்றில் பிறந்தாலும், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்துவிட்டாலும் குட்டிச்சுக்கிர தசை வந்து குடும்பப் பொருளாதாரத்தை சிதைத்துவிடும். இதனால் ஜாதகருக்கு சுக்கிர தசையால் எவ்விதப் பயனும் இருக்க வாய்ப்பில்லை.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என குரு பகவானின் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தாலும் சுக்கிர தசையை நம்பவேண்டியதில்லை.

Advertisment

ராசிக்கு 3, 6, 8, 12-ல் சுக்கிரன் இருந்தாலும், சுக்கிரன் பெற்ற சாரம் சரியில்லாமல் போனாலும், லக்ன விரோதமாக இருந்தாலும் சுக்கிர தசை பெரிய நன்மைகளைச் செய்துவிடாது.

1, 4, 7, 10 எனும் கேந்திரம் அல்லது சுய கேந்திரமானாலும் சுக்கிர தசை போராட்ட வருமானமாக இருக்குமேயொழிய சுலப சுகத்தைத் தராது.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எதுவோ, அதற்கு ஜாதகத்திலிருக்கும் சுக்கிரன் பெற்ற நட்சத்திரம் பகையானால் தசை வேலை செய்யாது.

சுக்கிர தசைக்காலம் இருபது வருடம் என்பதனால் அதன் புக்திக்காலங்கள்- குறிப்பாக புதன், கேது புக்திக்காலம் சிலருக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.

ஒருசிலருக்கு இடையிடையே விட்டு விட்டு யோகம் இருப்பதுபோல் தோன்றும். அது உண்மையிலேயே பலம் பெற்றதாக இருக்காது.

"சுக்கிர தசைக்காலத்தில் எனக்கு நடந்த ஒரே நன்மை திருமணம் கூடிவந்தது' எனக் கூறி ஆறுதல் அடைவோரும் உண்டு.

சினிமாத்துறையில் முயற்சித்துக் கொண்டிருக்கும் சிலர் சுக்கிர தசையை நம்பி ஏமாந்தது பெரும் கதையாக உள்ளது.

எந்த லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் மீனத்தில் உச்சமாக இருப்பதனால் மட்டும் நன்மை செய்துவிடுமென்று நம்புதல் அபத்தமாகும். மிதுனம், கன்னி, மகரம், கும்பம் போன்ற ராசி, லக்னங்களைத் தவிர மற்ற ராசி, லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை வேலை செய்யாதென்றும் கூறிவிடமுடியாது. சிலருக்கு ஆதிபத்திய அமைப்பை முறியடித்து திரிகோண சாரபலம் சாதகமாக இருந்தால் தர்ம- கர்ம அமைப்பில் யோகத்தைச் செய்யவும் வாய்ப்புள்ளது.

சில ஜோதிடர்கள் சிலரின் ஜாதகத்துக்குப் பலன் கூறுகையில், "இருபது வருடத்தில் பத்து வருடம் சரியாக இருக்காது; மீதி பத்து வருடம் நன்றாக இருக்கும்' என்று ஆறுதலாகச் சொல்லிவிடுவார்கள். அதை நம்பி வயது போனதுதான் மிச்சம்- பலன் என்னவோ பூஜ்யமாகிவிடும்.

பெரும்பாலும் ஸ்திர- உபய ராசிகளில் சுக்கிரன் இருப்பதைவிட சர ராசிகளில் இருந்து தசை நடத்தினால் நன்மைகள் நடக்க அதிக வாய்ப்புண்டு.

உணர்வுப்பூர்வமாக கற்பனையை, கனவை, காதலை, கவிதையை ஊற்றெடுக்க வைக்கும் கிரகம் சுக்கிரன். ஆசையைத் தூண்டிவிடக்கூடியது. அதேசமயம் அதை அனுபவிக்க, ஆள வழிவிடுமா என்பதுதான் கேள்வி.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை;

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.

-இது மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு ஒரு படத்தில் பாடிய கண்ணதாசனின் வரிகள். இந்த வரிகளை உண்மையாக்குவதுதான் சுக்கிர தசையின் வேலை. எப்படி என்கிறீர்களா?

ஒருவருடைய ஜாதகத்தில் முதல்தர யோகத்தை வழங்கும் வகையில் சுக்கிரன் இருந்து, முப்பது வயதுக்குள் தசை வரத்தொடங்கினால் மேற்கண்ட பாடல் வரிகளை உண்மையாக்கிவிடும். அப்படிப்பட்ட ஒருவரின் உதாரண ஜாதகம் இதோ-

பிறந்த தேதி: 25-6-1991 (ஆண்).

பிறந்த நேரம்: காலை 6.30.

பிறந்த இடம்: வேதாரண்யம்.

சாரம் நின்ற விதம்

திருவாதிரை 2-ல் சூரியன்.

அனுஷம் 4-ல் சந்திரன்.

ஆயில்யம் 2-ல் செவ்வாய்.

புனர்பூசம் 3-ல் புதன்.

ஆயில்யம் 2-ல் குரு.

ஆயில்யம் 4-ல் சுக்கிரன்.

உத்திராடம் 2-ல் சனி(வ).

பூராடம் 4-ல் ராகு.

புனர்பூசம் 2-ல் கேது.

அனுஷம் 4-ல் லக்னம்.

சனி மகா தசை இருப்பு- 1-11-25

மிதுன லக்னம், விருச்சிக ராசி. பத்தாவதுவரை படித்துவிட்டு பிறகு ஐ.டி.ஐ. படித்தார். பெரிய படிப்புக்கு வழியில்லை. சுமார் இரண்டு வருட அளவில் சனி தசை இருப்பு. பிறகு புதன் தசை முடிய பத்தொன்பது வயது- கேது தசை ஆரம்பம். அதாவது இருபத்தியோரு வயதில் சாதாரண வேலைக்கு மலேசியா சென்றார். இவரின் திறமையைப் பார்த்த சீன முதலாளி இவரிடம் கம்பெனி நிர்வாகத்தை ஒப்படைத்தார். பிறகென்ன? அபார வளர்ச்சி. சுக்கிர தசை ஆரம்பம் முதல்தர யோகம். ராசிக்கு 9-ல் சுக்கிரன் லக்னாதிபதி புதனுடைய சாரம். சுக்கிரன் சுலபமாகப் பணத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

செல்: 73731 72593